» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் உணவு விடுதிக்குள் அனுமதி மறுப்பு : சாலையோர கடையில் சாப்பிட்ட பிரேசில் அதிபர்!
புதன் 22, செப்டம்பர் 2021 10:53:00 AM (IST)
அமெரிக்காவில் பிரபல உணவு விடுதியில் பிரேசில் அதிபருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் சாலையோர உணவகத்தில் உணவருந்தினார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரேசில் அதிபர் போல்சனேரோ தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தினால் அமெரிக்காவில் உள்ள உணவு விடுதிக்குள் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டு சாலையோர உணவகத்தில் உணவருந்தும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றுள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ, தன் சக மந்திரிகளுடன் சேர்ந்து இரவு நேர உணவுக்காக விடுதி ஒன்றுக்குள் நுழைந்துள்ளார்.
அப்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டதற்கான சான்றிதழை கேட்டுள்ளனர். அதற்கு அவர் தடுப்பூசி இன்னும் செலுத்திக்கொள்ளவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போல்சனேரோ உள்ளிட்ட தலைவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென நியூயார்க் மேயர் பில் டே பலசியோ அறிவுறுத்தி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா உடனான போர் நிறுத்தத்தில் டிரம்ப் தலையீடு இல்லை: பாகிஸ்தான் அமைச்சர்
புதன் 17, செப்டம்பர் 2025 5:26:19 PM (IST)

நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்: ட்ரம்ப் நெகிழ்ச்சி!
புதன் 17, செப்டம்பர் 2025 12:04:25 PM (IST)

நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை: குடும்பத்துக்கு ரூ.90 கோடி இழப்பீடு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:27:31 AM (IST)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம்
சனி 13, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)
