» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஐநா பொது பேரவையில் பேச அனுமதிக்க வேண்டும்: ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு கோரிக்கை
புதன் 22, செப்டம்பர் 2021 5:02:04 PM (IST)
ஐநா பொது பேரவையின் பேச அனுமதிக்கும்படி ஆப்கானிஸ்தானத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானத்தில் தலைநகரான காபூல் ஆகஸ்ட் 15ஆம் தேதி தலிபான் அமைப்பினர் கைப்பற்றினார்கள். அதன் பிறகு சபை பொதுச்செயலாளர் கட்டரெஸ்ஸுக்கு செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் அமைச்சகத்தின் சார்பில் அனுப்பப்படுவதாக கடிதம் ஒன்று வந்தது அந்தக் கடிதத்தில் வெளியுறவு அமைச்சர் என்ற பெயரில் அமீர்கான் முத்தாகி என்பவர் கையெழுத்திட்டு கடிதத்தை அனுப்பி இருந்தார்.ஆப்கானிஸ்தான் அதிபர் பதவியில் இருந்த அஷ்ரப் கனி பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார் உலக நாடுகள் எல்லாம் அவரை அதிபராக இப்பொழுது அங்கீகரிப்பதில்லை அவர் நியமித்த இசாக்சாய் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் எமிரேட்டின் பிரதிநிதி அல்ல. புதிய பிரதிநிதியாக முகம்மது சுகையில் ஷாகின் என்பவரை பிரதிநிதியாக நியமிக்கிறோம். இது பேரவை கூட்டத்தில் அவருக்கு பேச வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று முத்தாகி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
கத்தாரில் சமரச பேச்சுவார்த்தைகள் நடந்த பொழுது தலிபான் அமைப்பின் செய்தியாளராக இருந்தவர் முகம்மது சுகையில் ஷாகின் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதே சமயத்தில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரதிநிதியாக முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட குலாம் இசாக்ஜாய் வழக்கப்படி ஐநா பொது பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் குழுவினர் என்று ஒரு பட்டியலை ஐநா பொதுச் செயலாளருக்கு அனுப்பி உள்ளார் தனது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குழுவினரை ஐநா பொது பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க முடியும் அவர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இரண்டு கடிதங்களும் அப்போது பெறவை கூட்டத்தை கூட்டி வந்துள்ளன என்ற செய்தியை ஐநா பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் உறுதி செய்தார். ஐநா பொது பேரவைத் தலைவர் அப்துல்லா சாகித்தின் கவனத்துக்கு இரண்டு விண்ணப்பங்களும் அனுப்பி வைக்கப்பட்டன அவர் ஆலோசனையின் பேரில் இரண்டு விண்ணப்பங்களும் யார் பிரதிநிதி என்பதை உறுதி செய்வதற்கான கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கமிட்டியில் அமெரிக்காவும் அங்கம் வகிக்கிறது.
அந்தக் கமிட்டியில் அமெரிக்கா தவிர ரஷ்யா, சீனா, பஹாமா, பூட்டான்,சிலி, நமீபியா, சியாரா லியோன், ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன. அந்த கமிட்டி எடுக்கும் முடிவே இறுதியானது என்று டுஜாரிக் குறிப்பிட்டார். ஐநா சபை பொதுப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான செப்டம்பர் 27ஆம் தேதி ஆப்கானிஸ்தான் பிரதிநிதி பேசுவதற்கு அவகாசம் தரப்பட்டுள்ளது. யார் பேசுவார்கள் என்பது தான் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
வியாழன் 23, அக்டோபர் 2025 4:21:51 PM (IST)

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலுக்கு இந்தியா காரணமா? ஆப்கானிஸ்தான் பதிலடி
புதன் 22, அக்டோபர் 2025 12:24:10 PM (IST)

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி தேர்வு!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 5:20:01 PM (IST)

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 சதவீதம் வரி: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 12:53:30 PM (IST)

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி
சனி 18, அக்டோபர் 2025 10:46:45 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உறுதி கூறினார்: டிரம்ப் பேட்டி!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:31:02 PM (IST)




