» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பெண்கள், சிறுமிகளின் உரிமைகளை கடைபிடிக்க வேண்டும்: தலீபான்களுக்கு ஐ.நா. வேண்டுகோள்!

செவ்வாய் 12, அக்டோபர் 2021 5:45:09 PM (IST)

பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை கடைபிடிக்குமாறு தலீபான்களுக்கு ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை கடைபிடிப்பதில் தலீபான்கள் அளித்த வாக்குறுதியை கடைபிடிக்க வேண்டும் ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்ட அறிக்கையில், தலீபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், முன்னாள் அரசு அலுவலகர்கள் உள்ளிட்ட ஆப்கன் குடிமக்களிடம் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். அந்த வாக்குறுதிகளை கடைபிடிக்குமாறு தலீபான்களிடம் கடுமையாக வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டம் ஆகியவற்றின் கீழ் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory