» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இனி வாரத்தில் 4½ நாள் மட்டுமே வேலை நாட்கள் : ஐக்கிய அரபு நாடுகள் அறிவிப்பு

செவ்வாய் 7, டிசம்பர் 2021 5:04:38 PM (IST)



ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாரத்திற்கு 4½ நாள் மட்டுமே வேலை நேரம் இருக்கும் என ஐக்கிய அரபு நாடுகள் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.

ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகளான ரஸ் அல் கைமா, அபுதாபி, சார்ஜா, துபை, அஜ்மன், உம்-அல்-குவைன் மற்றும் புஜைராவில் வருகிற 2022, ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய பணி நேரம் அறிமுகமாக இருக்கிறது. அதன்படி, திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 முதல் மாலை 3.30 வரை 8 மணி நேர பணியும் , வெள்ளிக்கிழமை காலை 7.30 முதல் மதியம் 12 வரை 4.30 மணி நேர பணியும் நடைமுறைக்கு வருகிறது. வெள்ளி மதியம் 1.15 மணிக்கு தொழுகை முடிந்ததிலிருந்து சனி , ஞாயிறு உள்பட 2.5 நாள்கள் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் குடும்பத்தை கவனிக்கவும் இந்த புதிய பணி திட்டம் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள்  மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். தற்போது, அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை மட்டுமே விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

MAKKALDec 8, 2021 - 03:30:02 PM | Posted IP 108.1*****

Good

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory