» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வாட்ஸ்அப் வதந்தியால் அரசியல் ஆலோசகர் உயிரோடு எரித்துக்கொலை மெக்சிகோவில் பயங்கரம்!

புதன் 15, ஜூன் 2022 11:32:35 AM (IST)

மெக்சிகோவில் குழந்தை கடத்தலில் தொடர்பு என பரவிய வதந்தியால், அரசியல் ஆலோசகர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மெக்சிகோ நாட்டை சேர்ந்த அரசியல் ஆலோசகர் டேனியல் பிகாசோ. 31 வயதான இவர் அந்த நாட்டின் நாடாளுமன்ற சட்ட குழுவில் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் மெக்சிகோவின் மத்திய மாகாணமான பாபட்லசோல்கோ நகரில் குழந்தை ஒன்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டது. இந்த குழந்தை கடத்தலில் டேனியல் பிகாசோவுக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக உள்ளூர் 'வாட்ஸ்அப்' குழுவில் வதந்தி பரவியது.

இந்த சூழலில் டேனியல் பிகாசோ, பாபட்லசோல்கோ நகரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்றார். அப்போது உள்ளூரை சேர்ந்த 200-க்கும் அதிகமானோர் டேனியல் பிகாசோவை சூழ்ந்து கொண்டு அவரை சரமாரியாக தாக்கினார். அப்போது அங்கு வந்த போலீசார் கும்பலிடம் இருந்து டேனியல் பிகாசோவை மீட்டு போலீஸ் ரோந்து வாகனத்தில் ஏற்ற முயன்றனர். ஆனால் அதையும் மீறி அந்த கும்பல் டேனியல் பிகாசோவை அருகில் இருந்து வயல் வெளிக்கு இழுத்து சென்று, அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory