» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் சிறையிலிருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிப்பு : வாகா எல்லையில் ஒப்படைப்பு!

செவ்வாய் 21, ஜூன் 2022 5:24:55 PM (IST)எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி பாகிஸ்தான் சிறையிலிருந்த 20 இந்திய மீனவர்கள் இன்று விடுவிக்கப்பட்டு வாகா எல்லையில் ஒப்படைக்கப்பட்டனர். 

இந்திய எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 20 பேரை 2018, ஜூன் மாதம் பாகிஸ்தான் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்று கராச்சி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இதற்கிடையே, பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்களை நன்னடத்தை அடிப்படையில் பாகிஸ்தான் விடுவித்துள்ளது. 

கராச்சியின் லாந்தி பகுதியில் உள்ள மாலிர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வாகா எல்லைக்கு செல்வதற்காக லாகூர் அனுப்பப்பட்டனர். இந்நிலையில், லாகூர் நகரில் இருந்து ரெயிலில் வந்த 20 மீனவர்களும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வாகா எல்லையில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டதாக பாகிஸ்தான் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory