» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவின் முதன்மை அறிவியல் ஆலோசகராக இந்திய பெண் நியமனம்: அதிபர் பைடன் பரிந்துரை
வியாழன் 23, ஜூன் 2022 12:52:08 PM (IST)
அமெரிக்காவின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆர்த்தி பிரபாகரின் பெயரை அதிபர் பைடன் பரிந்துரைத்துள்ளார்.
அமெரிக்காவில் அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, விண்வெளி ஆய்வு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிபருக்கு கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க ஆலோசனை வழங்குவது முதன்மை அறிவியல் ஆலோசகரின் பணியாகும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் இருந்த எரிக் லாண்டர் தனது சக ஊழியரை துன்புறுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார்.அதன் பிறகு, கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இப்பதவி காலியாக இருந்த நிலையில், அதிபரின் அடுத்த அறிவியல் ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் வெள்ளை மாளிகை தீவிரமாக ஈடுபட்டது. இந்நிலையில், அதிபர் பைடனின் அறிவியல் ஆலோசகர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆர்த்தி பிரபாகரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதனை செனட் சபை ஏற்று கொள்ளும் பட்சத்தில், இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் வெளிநாட்டு பெண், கருப்பினத்தவர் என்ற பெருமையை ஆர்த்தி பிரபாகர் பெறுவார்.
ஆர்த்தி பிரபாகர் 1959ம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். டெக்சாஸ் நகரத்தில் பள்ளிக் கல்வியை முடித்தார். கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 1984ம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். 1993ம் ஆண்டு பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது, தேசிய தர மற்றும் தொழில்நுட்ப மையத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி!
வெள்ளி 27, மார்ச் 2026 11:04:09 AM (IST)

ஹோர்முஸ் முடக்கத்திற்கு காரணமான ஈரான் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்!
வியாழன் 26, மார்ச் 2026 5:00:28 PM (IST)

ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி
வியாழன் 26, மார்ச் 2026 10:29:35 AM (IST)

பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி படுகொலை: சொந்தக் குடும்பத்தினரே தீர்த்துக்கட்டினர்?
திங்கள் 23, மார்ச் 2026 12:55:43 PM (IST)

வளைகுடாப் போரில் அதிரடி திருப்பம்: 4,000 கி.மீ. தூரம் பாயும் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:47:13 AM (IST)

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா பரிசீலனை: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:23:35 PM (IST)

