» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள எலிசபெத் ராணி உடலுக்கு பொதுமக்கள் விடிய விடிய அஞ்சலி

வெள்ளி 16, செப்டம்பர் 2022 5:26:41 PM (IST)



வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள இங்கிலாந் ராணி எலிசபெத்தின் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் வயது மூப்பு காரணமாக கடந்த 8ம் தேதி தனது 96வது வயதில் காலமானார். ராணியின் உடலுக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு ராணுவ மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக லட்ச கணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். சுமார் 8கி.மீ. தொலைவிற்கு நீண்ட வரிசையில் காத்து கிடைக்கும் மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே ராணிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராணியின் இறுதி சடங்கு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் உலகின் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அமெரிக்க ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் உள்ளிட்டோர் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ராணியின் இறுதி சடங்கில் கலந்து கொள்கிறார்.   


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory