» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பெண்ணின் வயிற்றில் இருந்து 555 பேட்டரிகள் அகற்றம்: உயிரை காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை!

திங்கள் 19, செப்டம்பர் 2022 12:40:36 PM (IST)



மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக பெண்ணின் வயிற்றில் இருந்து 55 பேட்டரிகளை வெற்றிகரமாக வெளியே எடுத்து அயர்லாந்து மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். 

அயர்லாந்து நாட்டில் 66 வயதான பெண் ஒருவர் வேண்டுமென்றே தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் செயலில் 50க்கும் மேற்பட்ட 'ஏஏ மற்றும் ஏஏஏ' ரக பேட்டரிகளை விழுங்கியுள்ளார். இதையடுத்து அந்த பெண் டப்லின் நகரில் உள்ள செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றுப் பகுதியை எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது, அவரது உடலில் 50க்கும் மேற்பட்ட பேட்டரிகள் இருப்பது உறுதியானது. 

ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது இரைப்பை குடல் (ஜிஐ) பாதையை அடைத்துக் கொண்டு அதை தடுக்கும் வகையில் பேட்டரிகள் எதுவும் எக்ஸ்-ரேவில் தோன்றவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆரம்பத்தில், அந்தப் பெண்ணின் உடலில் இருந்து இயற்கையாக மலம் வழியாக பேட்டரிகள் வெளியேறும் வரை மருத்துவர்கள் காத்திருந்தனர். ஒரு வார காலப்பகுதியில், அந்தப் பெண் நோயாளி ஐந்து ஏஏ பேட்டரிகளை இயற்கையாக வெளியேற்றினார். 

ஆனால் அதன்பின் அந்தப் பெண்ணுக்கும் வயிற்று வலி வர ஆரம்பித்தது. அதன்பிறகு அறுவை சிகிச்சையின் மூலம் வயிற்றில் சிறிய துவாரமிட்டு, 46 பேட்டரிகளை அயர்லாந்து மருத்துவர்கள் குழுவினர் அகற்றினர். மீதமுள்ள 4 பேட்டரிகள், பெருங்குடலில் சிக்கி, அவளது மலக்குடலில் ஆசனவாய் வழியாக வெளியேற்றப்பட்டன. இதன்மூலம் மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக ஒரே நேரத்தில், பெண்ணின் குடல் மற்றும் வயிற்றில் இருந்து 55 பேட்டரிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றிய அதிசய சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory