» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானுக்கு போர் விமானம் வழங்கிய விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு!
திங்கள் 26, செப்டம்பர் 2022 12:36:46 PM (IST)
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு போர் விமானம் வழங்கிய விவகாரத்தில் கடுமையாக சாடி பேசியுள்ளார்.

இதில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் மற்றும் அதிபர் பைடன் நிர்வாகத்தில் உள்ள பிற முக்கிய உயரதிகாரிகளை ஜெய்சங்கர் சந்தித்து பேச இருக்கிறார். சில வாரங்களுக்கு முன், ரூ.3 ஆயிரத்து 667 கோடி மதிப்பிலான எப்-16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. 2018-ம் ஆண்டுக்கு பின்பு முதன்முறையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதுபற்றி மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கூட்டத்தில் இருந்தவர்கள் சார்பில் வினா எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இந்த உறவு முறைக்கு அமெரிக்காவே இன்று உண்மையில் பதிலுரைக்க வேண்டும். இதனை வழங்கியதில் அவர்களுக்கு என்ன கிடைத்தது என அவர்கள் கூற வேண்டும்.
ஒரு சிலர் கூறலாம். நாங்கள் இதனை செய்கிறோம். ஏனெனில், இவை அனைத்தும் பயங்கரவாத ஒழிப்புக்கான செயல் என்று. ஆனால், எப்-16 போன்ற திறன் படைத்த விமானங்களை பற்றி பேசும்போது, ஒவ்வொருவருக்கும் அது பற்றி நன்றாக தெரியும்.
அதனை பெறுபவர்கள் எங்கே அவற்றை குவிக்கிறார்கள் மற்றும் அவர்கள் பயன்பாடு என்ன என்பது பற்றியும் உங்களுக்கு தெரியும். இதுபோன்ற விசயங்களை கூறி விட்டு, நீங்கள் யாரையும் முட்டாளாக்கவில்லையா? என குறிப்பிட்டு உள்ளார்.
அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் நான் பேசியிருந்தால், உண்மையில் இந்த விவகாரத்தில், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று பேசியிருப்பேன் என உறுதிப்பட ஜெய்சங்கர் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா போர் விமானங்களை வழங்கும் முடிவை தொடர்ந்து, மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டினை உடனடியாக தொடர்பு கொண்டு இந்தியாவின் கவலையை வெளியிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரிட்டனில் வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு
வெள்ளி 18, ஜூலை 2025 12:49:38 PM (IST)

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் நெருங்கிவிட்டோம் : அமெரிக்க அதிபர் டிரம்ப்
வியாழன் 17, ஜூலை 2025 5:26:05 PM (IST)

ஒரு கணம் கூட விவாகரத்துப் பற்றி சிந்தித்ததே கிடையாது: மிச்சல் ஒபாமா விளக்கம்!
வியாழன் 17, ஜூலை 2025 3:28:56 PM (IST)

நிமிஷாவை செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது: கொல்லப்பட்டவரின் சகோதரர் திட்டவட்டம்!
வியாழன் 17, ஜூலை 2025 11:46:44 AM (IST)

ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் தடை: இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை!
புதன் 16, ஜூலை 2025 10:45:54 AM (IST)

இந்திய அரசு முயற்சி: கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைத்தது ஏமன்!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:04:27 PM (IST)

TruthOct 1, 2022 - 03:19:31 PM | Posted IP 162.1*****