» செய்திகள் - விளையாட்டு » உலகம்

விண்கற்களிடமிருந்து பூமியை காக்கும் டார்ட் விண்கலம் திட்டம் வெற்றி: நாசாவுக்கு பாராட்டுக்கள் குவிகிறது!!

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 4:48:06 PM (IST)உலகில் முதன்முதலாக பூவியை மற்ற விண்பொருட்களிடமிருந்து காக்கும் நாசாவின் டார்ட் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. 

சூரிய மண்டலத்தில் உள்ள கோள் பூமி. பூமியை சுற்றி லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இதனிடையே, இந்த சிறுகோள்கள் அல்லது பிற விண்வெளி கற்கள் போன்றவை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறதா? என விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கிரக பாதுகாப்புக்கான அதன் தற்போதைய பணியை நிர்வகிக்க 'கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம்(பிடிசிஓ)' ஒன்றை நிறுவி உள்ளது. இந்த அமைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியது. அந்த விண்கலம் ஒன்றை விண்ணுக்கு அனுப்பியது. அந்த விண்கலம் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்ட டிடிமோஸ் பைனரி என்ற சிறுகோளை கண்டுபிடித்தது.

இந்த டிடிமோஸ் பைனரி சிறுகோளை பூமி மீது மோதுவதை தடுத்து அதை திசைதிருப்ப நாசா சோதனை அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டது. அந்த வகையில் நாசாவால் ஏவப்பட்ட அந்த விண்கலம் பூமி மீது மோத வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட சிறுகோள் மீது இன்று வெற்றிகரமாக மோதப்பட்டது. இதன் மூலம் அந்த சிறுகோளின் பாதை பூமியில் இருந்து திசைதிருப்பப்பட்டுள்ளது. இதனால், அந்த சிறுகோளால் பூமிக்கும் ஏற்படவிருந்த ஆபத்து முறியடிக்கப்பட்டது.

சிறுகோள் மீது விண்கலம் மோதும் வீடியோவை நாசா தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பியது. விண்கலம் வெற்றிகரமாக சிறுகோள் மீது மோதிய நிலையில் அந்த கோளின் பயண திசை விரைவில் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் முதன்முதலாக பூவியை மற்ற விண்பொருட்களிடமிருந்து காக்கும் நாசாவின் இந்த டார்ட் திட்டத்திற்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது, இந்த  திட்டத்தை வெற்றிகரமான செய்து காண்பித்தது மூலம் எதிர்காலத்தில் விண்கற்கள் அல்லது கோள்களால் ஆபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து

letscSep 28, 2022 - 09:57:40 AM | Posted IP 162.1*****

inimethan aatame irukku

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory