» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பில் கைதாகி விடுவிக்கப்பட்ட நபர் படுகொலை!
புதன் 30, நவம்பர் 2022 12:23:17 PM (IST)
இலங்கையில் 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் கொழும்பில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகை நாளில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில் டஜன் கணக்கான வெளிநாட்டினர் உள்பட 265 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இந்த பயங்கரவாத தாக்குலில் தொடர்புடையதாக கூறி இலங்கையின் மட்டக்குளியா நகரை சேர்ந்த 38 வயதான முகமது பதுர்தீன் முகமது ஹர்னாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பதுர்தீன் நேற்று முன்தினம் மட்டக்குளியா நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த பதுர்தீனை அவரது குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி: நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய ஸோரான் மம்தானி!
புதன் 5, நவம்பர் 2025 12:43:54 PM (IST)

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)




