» செய்திகள் - விளையாட்டு » உலகம்
என் தந்தையின் உடல் கடலில் வீசப்பட்டதை நான் நம்பவில்லை: ஓமர் பின்லேடன் பேட்டி
வெள்ளி 2, டிசம்பர் 2022 10:40:17 AM (IST)
"எனது தந்தை பின்லேடனின் உடல் கடலில் வீசப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தினர் கூறியதை நம்பவில்லை" என்று பின்லேடனின் மகன் ஒமர் தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின் லேடனின் முதல் மனைவி நஜ்வாவுக்கு கடந்த 1981ஆம் ஆண்டு மார்ச் மாதம் சௌதி அரேபியாவில் பிறந்தவர் ஒமர். பின் லேடனின் நான்காவது மகனான ஒமர், பல்வேறு சம்பவங்களால் தான் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், தனது தந்தையுடனான மோசமான நாள்களை மறக்க முயல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 41 வயதாகும் ஒமர், பிரான்ஸ் நாட்டின் நோர்மாண்டி நகரில் தனது மனைவி ஸைனாவுடன் வசித்து வருகிறார். ஒசாமா பின் லேடன், அடிக்கடி தன்னிடம், தனது பணிகளைத் தொடரும் மகனாக அவர் என்னைத்தான் தேர்வு செய்திருப்பதாகக் கூறுவார். ஆனால், ஒருபோதும் அல் கய்தாவில் இணையுமாறு என்னை வற்புறுத்தியதில்லை என்று தெரிவித்துள்ளார். ஓவியங்களை வரைந்து விற்பனை செய்து வரும் ஒமர், தனது பழைய மோசமான நினைவுகளிலிருந்து வெளியேற இது ஒரு சிகிச்சை போல இருப்பதாகவும், கூறுகிறார்.
தனது தந்தை ஒசாமா பின் லேடனின் உடல் கடலில் வீசப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தினர் கூறியபோதிலும், அதனை தான் நம்பவில்லை என்று கூறும் ஒமர், அவரது உடலை புதைத்திருந்தால், அது எங்கே என்று அறிந்து கொள்வது நன்றாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்கள் அந்த உடலை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. கடலில் வீசிவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் அதை நான் நம்பவில்லை, அவர்கள் அமெரிக்க மக்களுக்குக் காட்ட அதனை கொண்டு சென்றிருக்கலாம் என்று கருதுகிறேன்.
தான் ஆப்கானிஸ்தானில் சிறுவனாக இருந்த போதே தன்னிடம் துப்பாக்கிகளைக் கொடுத்து சுடப் பயிற்சி அளித்ததாகவும், ஒசாமா பின் லேடன், தனது தடம் பற்றி வர பயிற்சி அளித்ததாகவும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காசா அமைதிக்கான குழுவில் இடம்பெறுமாறு இந்தியாவுக்கு டிரம்ப் அழைப்பு!
திங்கள் 19, ஜனவரி 2026 11:39:03 AM (IST)

உகாண்டா அதிபராக யோவேரி முசேவேனி ஏழாவது முறையாக வெற்றி
ஞாயிறு 18, ஜனவரி 2026 12:16:51 PM (IST)

கிரீன்லாந்து விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு சுங்க வரி : டிரம்ப் எச்சரிக்கை!
சனி 17, ஜனவரி 2026 10:19:13 AM (IST)

லடாக்கில் டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டம் : சவப்பெட்டியுடன் திரண்ட மக்கள்!
புதன் 14, ஜனவரி 2026 4:51:14 PM (IST)

மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்
திங்கள் 12, ஜனவரி 2026 8:43:22 PM (IST)

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தி, பல கோடி உயிர்களை காப்பாற்றினேன்: டிரம்ப் பேச்சு!
சனி 10, ஜனவரி 2026 12:45:36 PM (IST)

