» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை: ஜப்பான் அரசு ஒப்புதல்

சனி 27, மே 2023 5:27:34 PM (IST)

உக்ரைனுக்கு எதிராக தொடர்ந்து போர் நடத்தி வரும் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிப்பதற்கு ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

ஜப்பானில் கடந்த வாரம் ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தொடர்ந்து போர் நடத்தி வரும் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை வலுப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஜி7 நாடுகள் ஆலோசனை நடத்தின.

இந்நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக ஜப்பான் கூடுதல் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது தொடர்பாக கேபினெட் தலைமை செயலாளர் ஹீரோகாசு மாட்சுனோ கூறுகையில், ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடை விதிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி தனிநபர்கள் மற்றும் குழுக்களின் சொத்துக்கள் முடக்கப்படும். ரஷ்யா ராணுவம் தொடர்பான அமைப்புக்களுக்கான ஏற்றுமதி தடை செய்யப்படும்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory