» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கோடீஸ்வரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

ஞாயிறு 4, ஜூன் 2023 4:39:13 PM (IST)

உலக கோடீஸ்வரர் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடம் பிடித்தார். 

உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கை கடந்த டிசம்பரில் முதல் முறையாக எல்விஎம்எச் நிறுவன அதிபர் அர்னால்ட் பின்னுக்குத் தள்ளினார். இந்நிலையில், சீனாவில் பொருளாதார மந்த நிலை அறிகுறியால் எல்விஎம்எச் பிராண்டு விற்பனை சரிவை எதிர்கொண்டது.

அதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் எல்விஎம்எச் பங்கின் விலை 10 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. அர்னால்டின் நிகர சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர் அளவுக்கு சரிவடைந்ததையடுத்து அவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

முதலிடத்துக்கு முன்னேறிய எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 55.3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக ஏற்றம் கண்டுள்ளது. இதையடுத்து, பார்ச்சூன் பட்டியிலில் 192.3 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடத்திலும், அர்னால்ட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory