» செய்திகள் - விளையாட்டு » உலகம்

டிரம்புக்கு ரூ. 376 கோடி தேர்தல் நன்கொடை வழங்க எலான் மஸ்க் வழங்க முடிவு!

செவ்வாய் 16, ஜூலை 2024 5:33:36 PM (IST)



அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு தேர்தல் நிதியாக ரூ. 376 கோடியை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் நடுநிலை வகிக்கவுள்ளதாக முதலில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இருப்பினும், மறைமுகமாக டிரம்புக்கு ஆதரவாக அமெரிக்க தொழிலதிபர்களுடன் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், கடந்த சனிக்கிழமை டிரம்பு மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு வெளிப்படையாக மஸ்க் ஆதரவை அறிவித்தார்.

இந்த நிலையில், டிரம்புக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் சூப்பர் பிஏசி நிறுவனத்திடம் 4.5 கோடி டாலர் (இந்திய மதிப்பின்படி ரூ.376 கோடி) நிதி வழங்க உறுதி அளித்துள்ளதாக ’தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ திங்கள்கிழமை தெரிவித்திருந்தது. மேலும், மற்றொரு அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, தொழிலதிபர்கள் ஷான் மாகுவேர், ஜான் ஹெரிங் ஆகியோர் தலா 5 லட்சம் டாலர்கள், கேமரூன் மற்றும் டைலர் விங்க்லெவோஸ் தலா 2.5 லட்சம் டாலர்கள் நன்கொடை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டிரம்புக்காக யாரிடமிருந்து எவ்வளவு நிதி பெறப்பட்டுள்ளது என்ற விவரத்தை சூப்பர் பிஏசி நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது. வரும் நவம்பா் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் அந்நாட்டின் தற்போதைய அதிபா் ஜோ பைடன், குடியரசு கட்சி சாா்பில் டொனால்ட் டிரம்ப் ஆகியோா் வேட்பாளா்களாகப் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், அவர் காது பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பத்துக்கு பிறகு டிரம்புக்கான ஆதரவு அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory