» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா: ‍ வெள்ளை மாளிகை அறிவிப்பு

வியாழன் 18, ஜூலை 2024 11:19:04 AM (IST)

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகளைக் காட்டுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ( ஜோ பைடன்) டெலாவேருக்குத் திரும்புவார், அங்கு அவர் சுயமாக தனிமைப்படுத்தப்படுவார். அந்த நேரத்தில் தனது அனைத்து கடமைகளையும் முழுமையாகச் செய்வார்" என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிபர் ஜோபைடன் தனது எக்ஸ் வலைதளத்தில், "இன்று மதியம் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது, நான் தற்போது நன்றாக இருப்பதாக உணர்கிறேன், அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி. நான் குணமடைவதற்காக தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளேன். அந்த நேரத்தில் அமெரிக்க மக்களுக்கான பணியை தொடர்ந்து செய்வேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

81 வயதான பைடன், லாஸ் வேகாசில் நடந்த என்.ஏ.ஏ.சி.பி. தேசிய மாநாட்டில் கலந்து கொண்டநிலையில், நேற்று அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. முன்னதாக அந்த மாநாட்டில் பேசிய அவர் டொனால்டு டிரம்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். மேலும் நாட்டில் துப்பாக்கி வன்முறை அதிகரிப்பதை கடுமையாக கண்டித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory