» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கதேச வன்முறையில் 36 பேர் பலி; மக்கள் அமைதி காக்குமாறு பிரதமர் வேண்டுகோள்!

வெள்ளி 19, ஜூலை 2024 5:49:00 PM (IST)



வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட போராட்ட வன்முறையில் 36 பேர் கொல்லப்பட்டனர். நாட்டு மக்கள் அமைதி காக்குமாறு பிரதமர் ஷேக் ஹசீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வங்கதேசம் - பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை வங்கதேசத்தில் இருந்தது. கடந்த 2018ல் மாணவர்கள் போராட்டத்தால் இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டிருந்தது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை துவங்கினர். போராட்டம் வன்முறையாக மாறியது. வன்முறையில் 36 பேர் கொல்லப்பட்டனர். டி.வி., நிலையம் எரிக்கப்பட்டது. தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டது. மக்கள் அமைதி காக்குமாறு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory