» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அர்ஜென்டினாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து ஆராய்ச்சியாளர்கள் உள்பட 8 பேர் பலி!

வியாழன் 25, ஜூலை 2024 12:40:02 PM (IST)

அர்ஜென்டினாவில் ஆராய்ச்சிக்காக அரியவகை மீனை தேடி சென்றபோது, நடுக்கடலில் படகு கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்தனர்.

அட்லாண்டிக் கடலில் ‘டூத்பிஷ்’ என்னும் அரியவகை மீன் ஒன்று காணப்படுகிறது. இயற்கையாகவே இந்த மீனுக்கு பாதரசம் என்னும் வேதிப்பொருளை உட்கொள்ளும் தன்மை உள்ளது. இதனால் இந்த மீனில் உள்ள பாதரசத்தின் உள்ளடகத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கடலின் மாசுபாடை கண்டறிந்து வருகின்றனர். 

இதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த மீனை தேடி அட்லாண்டிக் கடலுக்கு படையெடுக்கின்றனர். அட்லாண்டிக் கடலின் தெற்கு பகுதியில் உள்ள தீவு நாடாக பால்க்லாந்து விளங்குகிறது. தீவுக்கூட்டத்தை இங்கிலாந்து நிர்வகித்து வரும்நிலையில் பால்க்லாந்து தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என அர்ஜென்டினா கூறி வருகிறது.

இந்தநிலையில் ரஷியா, இந்தோனேசியா, பெரு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த மீனை ஆய்வு செய்வதற்காக பால்க்லாந்து வந்தனர். அங்கிருந்து உள்ளூர் மீனவர்கள், ஆராய்ச்சி குழுவினர் உள்பட 27 பேர் குறிப்பிட்ட அந்த மீனை பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர்.

நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது வானிலை மாற்றம் காரணமாக கடும் புயல் வீசியது. இதில் அந்த மீன்பிடி படகு முற்றிலுமாக சேதமடைந்து நடுக்கடலில் கவிழ தொடங்கியது.இதனையடுத்து அதில் இருந்த அனைவரும் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக கடலில் குதித்தனர்.

இதில் நீரில் மூழ்கி ரஷியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அந்த வழியாக வந்த கப்பலில் வந்த மாலுமிகள் கடலில் தத்தளித்து தவித்த 14 பேரை உயிருடன் மீட்டனர். இந்தநிலையில் கடலில் மூழ்கி காணாமல் போன மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory