» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் குற்றம் அதிகரிக்கும் : டிரம்ப் குற்றச்சாட்டு

திங்கள் 29, ஜூலை 2024 12:48:52 PM (IST)

கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் குற்றம், குழப்பம் அதிகரிக்கும் என்று டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட துணை அதிபர் கமலா ஹாரிஸ் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், விரைவில் அவர் அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிரசாரம் மேற்கொண்ட டிரம்ப், கமலா ஹாரிசை கடுமையாக தாக்கி பேசினார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது: தீவிர தாராளவாத கொள்கை கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால் அவர் நம் நாட்டிற்கு குற்றம், குழப்பம் மற்றும் மரணத்தை வழங்குவார். அதே சமயம் நான் அதிபரானால் அமெரிக்காவில் சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியை மீட்டெடுப்பேன்.

அதிபராகும் முதல் நாளில் பைடன்-ஹாரிஸ் நிர்வாகத்தின் ஒவ்வொரு திறந்த எல்லை கொள்கையையும் முடிவுக்கு கொண்டு வருவேன். நாங்கள் எல்லையை பூட்டுவோம். நாம் நாட்டிற்குள் பயங்கரமான படையெடுப்பை நிறுத்துவோம். கமலா ஹாரிஸ் மாவட்ட வக்கீலாக பணியாற்றி சான் பிரான்சிஸ்கோவை அழித்தார். அவர் அதிபரானால் நம் நாட்டை அழிப்பார்.

அமெரிக்க வரலாற்றில் மிகவும் திறமையற்ற, செல்வாக்கற்ற மற்றும் தீவிர இடதுசாரி துணை அதிபர் என்றால் அது கமலா ஹாரிஸ்தான். அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீவிர இடதுசாரி அவர்தான்.இவ்வாறு டிரம்ப் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory