» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியாவின் அணுமின் நிலையம் மீது டிரோன் தாக்குதல் : உக்ரைன் மீது குற்றச்சாட்டு

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 12:31:53 PM (IST)



ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அணுமின் நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது.  இந்த தாக்குதலுக்கு உக்ரைனே காரணம் என்று ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

ரஷியா-உக்ரைன் போர் கடந்த 2½ ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவற்றின் பொருளாதார உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்நிலையில் உக்ரைன் படைகள் முதன் முறையாக ரஷியாவின் கூர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்துள்ளது.

அங்கு உக்ரைன் ராணுவம் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இதுகுறித்து முதலில் உக்ரைன் தரப்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் நுழைந்திருப்பதை தற்போது வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

இதன் காரணமாக உக்ரைன் படைகள் முன்னேறுவதை தடுக்க ரஷியா தனது ராணுவத்தை அங்கு குவித்து வருகிறது. மேலும் உக்ரைன் படை நுழைந்ததால் கூர்க்ஸ் பிராந்தியத்தில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அங்கிருந்து பொதுமக்கள் 76 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இந்த பதற்றத்துக்கு மத்தியில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய ஜபோரிஜியா அணுமின் நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் அங்குள்ள ஒரு உலையில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதன் காரணமாக அந்த பகுதி கரும்புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

எனவே அந்த அணுமின் நிலையத்தில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலே இதற்கு காரணம் என ரஷியா குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் உக்ரைன் ராணுவம் இதனை மறுத்து வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory