» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியாவில் நிலநடுக்கத்தால் எரிமலை வெடிப்பு: அடுத்தடுத்து இயற்கை சீற்றங்கள்

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2024 9:50:22 AM (IST)

ரஷியாவின் கிழக்கு கம்சாட்கா கடற்கரையில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து எரிமலை வெடிப்பு சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து 90 கி.மீ. தொலைவில், பூமிக்கு 50 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலடுக்கத்தால் எந்தவித பொருள்சேதமோ, உயிர்ச்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்றும், இருப்பினும் கட்டடங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.மேலும், நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்படும் என்ற எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

ரஷியாவின் கம்சட்காவில் சுமார் 181,000 மக்கள் வசிக்கும் கடற்கரை நகரத்தில் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து 450 கி.மீ. தொலைவில் ஷிவெலுச் எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை வெடித்து சிதறியுள்ளது. ரஷியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கத்தால் கம்சாட்கா மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory