» செய்திகள் - விளையாட்டு » உலகம்

துருக்கியில் போர்க்களமான நாடாளுமன்றம் : எம்பிக்கள் மோதல் - பெண்கள் படுகாயம்

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2024 11:38:10 AM (IST)



துருக்கி நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது எம்.பி.க்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதில் பெண் எம்.பி. உள்பட பலருக்கு படுகாயம் ஏற்பட்டது.

துருக்கியில் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் கேன் அடலே. கடந்த 2013-ம் ஆண்டு அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் கோர்ட்டு அவருக்கு 18 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் சிறையில் இருந்துகொண்டே தொழிலாளர் கட்சி சார்பில் அடலே போட்டியிட்டார். அப்போது பிரசாரம் மேற்கொள்ளவில்லை என்றாலும் அவர் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் சிறை தண்டனையை காரணம் காட்டி அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அடலே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் அவரது தகுதி நீக்கம் செல்லாது என அறிவித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த சூழ்நிலையில் அங்கு தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது அடலேவை நாடாளுமன்றத்தில் அனுமதிக்க கோரி எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இதற்கு ஆளுங்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனையடுத்து எதிர்க்கட்சி எம்.பி. அகமது சிக் ஆளுங்கட்சியை பயங்கரவாத அமைப்பு என விமர்சித்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

இதில் பெண் எம்.பி.க்கள் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் நாடாளுமன்றம் போர்க்களம் போல காட்சி அளித்தது. இதனையடுத்து சபாநாயகர் அவையை ஒத்தி வைத்தார். நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதிக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory