» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மக்களுக்காக முழு வாழ்வையும் செலவிட்டவர்: கமலா ஹாரிசுக்கு பாரக் ஒபாமா புகழாரம்!

புதன் 21, ஆகஸ்ட் 2024 11:01:32 AM (IST)

மக்களுக்கு முழு வாழ்வையும் செலவிட்ட ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது என்று கமலா ஹாரிசுக்கு பாரக் ஒபாமா புகழாரம் சூட்டினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ், அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்த சூழலில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜனநாயக கட்சியின் 4 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இதனை காண்பதற்காக அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் முறைப்படி அறிவிக்கப்படுவார். இதேபோன்று, துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள மின்னசோட்டா கவர்னர் டிம் வால்சும் முறைப்படி வேட்பாளராக இந்த மாநாட்டில் அறிவிக்கப்படுவார்.

இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்று பேசிய கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார். அவருக்கு நாங்கள் எப்போதும் நன்றியுடையவர்களாக இருப்போம் என கூறினார். முதல் நாளில், கமலாவுக்கு ஆதரவாக, அமெரிக்க கூடைப்பந்து போட்டியின் பயிற்சியாளர் ஸ்டீவ் கெர், ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டோர் பேசினர்.

இதனை தொடர்ந்து, 2-ம் நாள் மாநாடு இன்று நடந்தது. இதில், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கமலா ஹாரிஸ் தனக்கு நம்பிக்கையை தருகிறார் என கூட்டத்தினரின் முன் கூறினார்.

தொடர்ந்து அவர், மக்களுக்கு முழு வாழ்வையும் செலவிட்ட ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. நான் கடந்த காலங்களை திரும்பி பார்க்கிறேன். என்னுடைய முதல், பெரிய முடிவு சிறந்த ஒன்றாக இருந்தது. அது, என்னுடைய துணை அதிபராக பணியாற்ற ஜோ பைடனை கேட்டு கொண்டேன்.

ஒரு திறமையான அதிபராக பைடனை வரலாறு நினைவுகூரும். அவரை என்னுடைய அதிபராக அழைப்பதில், என்னுடைய நண்பராக அழைப்பதிலும் நான் பெருமை கொள்கிறேன் என்றார்.

அவர் கமலா ஹாரிசை பற்றி பேசும்போது, ஒரு புதிய அத்தியாயத்திற்கு அமெரிக்கா தயாராகி வருகிறது. கமலா ஹாரிசுக்காக நாங்கள் தயாராகி வருகிறோம். அவர் அதிபர் பணிக்கு தயாராக இருக்கிறார்.

அவர், தன்னுடைய விவகாரங்களை விட உங்கள் மீது அதிக கவனம் செலுத்துபவராக இருப்பார். நாடு முழுவதுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் மீது உண்மையான கவனம் செலுத்தும் ஓர் அதிபர் நமக்கு தேவையாக இருக்கிறார். அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அதிபர் ஒருவர் நமக்கு தேவை. சிறந்த ஊதியத்திற்காக பேசுபவராக இருப்பவர் தேவை. அந்த அதிபராக கமலா ஹாரிஸ் இருப்பார். அவரால் முடியும் என பேசியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory