» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரதமர் மோடி-ஜெலன்ஸ்கி புகைப்படம் சமூக வலைதளத்தில் சாதனை: 15+ லட்சம் லைக்ஸ்!

சனி 24, ஆகஸ்ட் 2024 4:48:48 PM (IST)



பிரதமர் மோடியுடனான ஜெலன்ஸ்கியின் புகைப்படம்  15 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் பெற்று சமூக வலைதளத்தில் சாதனை படைத்துள்ளது.

முதல் முறையாக உக்ரைன் சென்ற பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடியுடன் ஜெலன்ஸ்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அவற்றை தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில், 'இந்தியா-உக்ரைன் இடையேயான உறவுகள் மற்றும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்துவதற்கு எங்கள் சந்திப்பு முக்கியமானது' என குறிப்பிட்டு இருந்தார். 

ஜெலன்ஸ்கியின் இந்த பதிவு சில மணி நேரங்களில் 15 லட்சத்துக்கு மேற்பட்ட 'லைக்ஸ்'களை பெற்றது. இது அவரது சமூக வலைத்தள பதிவுகளில் சாதனையாக மாறியது. இதற்கு முன் 7.8 லட்சம் 'லைக்ஸ்'களை பெற்றதே அவரது அதிகபட்சமாக இருந்தது. தற்போது மோடியுடனான புகைப்படம் அதை முறியடித்து இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் அதிக பின்தொடர்பாளர்களை கொண்ட உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருப்பதே இதற்கு காரணம் ஆகும் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory