» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவை தொடர்ந்து வியட்நாமை தாக்கியது`யாகி' புயல்: இயல்பு வாழ்க்கை முடங்கியது!

ஞாயிறு 8, செப்டம்பர் 2024 11:35:38 AM (IST)



சீனாவை தொடர்ந்து யாகி புயல் வியட்நாமை தாக்கியது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

பிலிப்பைன்சில் உருவான யாகி புயலால் கடந்த வாரம் அங்கு கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி அங்கு 14 பேர் பலியாகினர். இதனையடுத்து அந்த புயல் சீனாவை நோக்கி நகர்ந்தது. தென்கிழக்கு மாகாணமான ஹைனான் தீவு அருகே கரையை கடந்த யாகி புயலால் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் அங்கு மழை வெளுத்து வாங்கியது.

இதன் காரணமாக அங்கு ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 8 லட்சம் பேர் இருளில் மூழ்கினர். மேலும் இந்த புயலுக்கு சீனாவில் 2 பேர் உயிரிழந்தனர். 92 பேர் படுகாயம் அடைந்து யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

இந்தநிலையில் யாகி புயல் தற்போது வியட்நாமை நோக்கி நகர்ந்து வருகிறது. அங்குள்ள குவாங் நின் நகரில் புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சம் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியட்நாமில் தலைநகர் ஹனோய் உள்பட 4 விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு திட்டமிட்டபடி செல்ல முடியாமல் அவதியுற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory