» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தனியார் நிறுவனத்தில் 61 லாரிகள் சிறைபிடிப்பு : உரிமையாளர்கள் போலீசில் புகார்

ஞாயிறு 12, பிப்ரவரி 2017 10:31:13 AM (IST)

ஆறுமுகநேரி அருகே தனியார் நிறுவனத்தில் தொழிற்சங்கத்தினர் 61 லாரிகளை சிறை பிடித்தனர். 

துாத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே சாகுபுரத்தில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 550 நிரந்தர தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கான சம்பள உயர்வு பற்றிய பிரச்சினை கடந்த 9 மாதங்களாக இருந்து வந்தது. பேச்சுவார்த்தை முடிவை எட்டாத நிலையில் கடந்த 2-ந் தேதி முதல் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். தொழிற்சாலைக்குள் மூலப்பொருள்களை கொண்டுவரும் லாரிகளையும், உற்பத்தி பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளையும் ஆலை வாயிலில் மறித்தனர். 

இதன்படி அங்கு இதுவரையில் 61 லாரிகளை கடந்த 11 நாட்களாக அவர்கள் சிறை பிடித்து வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் தூத்துக்குடி மாவட்ட ஏடிஎஸ்பி கந்தசாமி, திருச்செந்தூர் சார் ஆட்சியர் தியாகராஜன், தாசில்தார் செந்தூர்ராஜன், டி.எஸ்.பி.ராமராஜன் ஆகியோர் முன்னிலையில், நிறுவன செயல் உதவித்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் இரவு தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் கதவடைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. 

இதனால் தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட சுமார் 3000 பேர் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. பேச்சுவார்த்தையின் போது காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட லாரிகள் மற்றும் ஓட்டுனர்களையும் விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

ஆனால் போராட்டக்காரர்கள் லாரியை வெளியில் விட மறுத்து வருகின்றனர்.இந்நிலையில் லாரிகளை விடுவிக்க லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் காரணமாக ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

yovanFeb 17, 2017 - 08:50:54 PM | Posted IP 117.2*****

வெல்லட்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory