» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 300 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு : ஐ.ஜி பேட்டி

திங்கள் 13, பிப்ரவரி 2017 9:02:56 PM (IST)

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 300 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்கப்பட்டுள்ளது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் கன்னியாகுமரியில் தெரிவித்தார்.

பழவூர் நாறும்பூ நாதர் கோவிலில் உள்ள ஐம்பொன்னால் ஆன சுவாமி மற்றும் அம்பாள் சிலைகள் கடந்த 2006ம் ஆண்டு கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த சிலைகள் பின்னர் 2008ம் ஆண்டு மீட்க்கப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்வதற்க்காக பழைமையான கோவிலான பழவூர் நாறும்பூநாதர் கோவிலுக்கு டில்லியில் உள்ள தொல்லியியல் துறை அதிகாரிகள் குழு வந்தனர். அந்த குழுவில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலும் இடம் பெற்றிருந்தார். அவரும் கோவிலை பார்வையிட வருகை தந்தார்.

பின்னர் அவர் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் கூறும் போது, நெல்லை மாவட்டம், பழவூர் நாறும்பூ நாதர் கோவிலில் உள்ள ஐம்பொன்னால் ஆன சுவாமி சிலை மற்றும் அம்பாள் சிலைகள் கடத்தல்காரர்களால் 2006ம் ஆண்டு கடத்தப்பட்டு வெளிநாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் 2008ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் 13சிலைகளும் மீட்க்கப்பட்டுள்ளது.அதில் 9 சிலைகள் 2008 ம் ஆண்டு மீட்கப்பட்டுள்ளது/ இதில் நடராஜர் சிலை 15 கோடி ரூபாய் மதிப்புடையது. 

இந்த சிலையை அமெரிக்காவிற்க்கு கடத்தும் போது சிலையின் கை பகுதி சேதமடைந்தது.பின்னர் இந்த சிலை லண்டனுக்கு அனுப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள அம்மன் சிலை சிங்கப்பூரிலிருந்து மீட்கப்பட்டது. இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள அம்மன்சிலை நியூயார்க்கிலிருந்து மீட்கப்பட்டது. மேலும் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள காரைக்கால் அம்மையார் சிலை ஸ்பெயின் நாட்டில் மீட்கப்பட்டது. இந்தியாவின் முக்கிய சிலை கடத்தல் மன்னன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சிலை எதுவும் கடத்தப்படவில்லை.  சிலை கடத்தலை தடுக்க உள்ளூர் போலீஸாருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  முக்கிய கோவில்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுளளது. இந்தியாவிலிருந்து கனடா , ஆஸ்திரேலியா ,சிங்கப்பூர் , அமெரிக்கா போன்ற நாடுகளுக்குத்தான் சிலைகள் அதிகளவில் கடத்தப்படுகிறது. அதிலும் ஆஸ்திரோலியாவிற்க்குத்தான் அதிக அளவில் சிலைகள் கடத்தப்பட்டுள்ளது. அதில் 150 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் மீட்க்கப்பட்டுள்ளன.  

மேலும் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்க்கு கடத்தப்பட்ட 300 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் மீட்க்கப்பட்டுள்ளன. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 1200 கோவில்களில் ஐம்பொன் மற்றும் பஞ்சலோக சிலைகள் உள்ளன அதில் 300 கோவில்களில் உள்ள சிலைகள் 75 சதவீதம் பழமையான சிலைகளாகும் . சிலை கடத்தல் மன்னன் தமிழ்நாட்டை சேர்ந்த தீனதயாளன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளான். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கன்னியாகுமரி டி எஸ் பி வேணுகோபால் , சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory