» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வேலை தேடும் இளைஞர்களுக்கு இலவச வேலை வாய்ப்பு பயிற்சி : பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

புதன் 15, பிப்ரவரி 2017 12:20:03 PM (IST)

வேலை தேடும் இளைஞர்/இளம்பெண்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கி வருவதாக திருநெல்வேலி தொலை தொடர்பு மாவட்ட பி.எஸ்.என்.எல், பொதுமேலாளர், ப.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு : இந்திய அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள வேலை தேடும் இளைஞர்/இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பிற்கு ஏற்ற பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொலைதொடர்பு துறையில் ஆப்டிகல் பைபர் தொழில்நுட்பம் எல்லா இடங்களிலும் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கேபிள் டி.வி போன்ற சேவைகளிலும் தற்போது ஆப்டிகல் பைபர் கேபிள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் ஆப்டிகல் பைபர் கேபிள் அறிந்த இளைஞர்/இளம்பெண்கள் தொலைதொடர்பு துறை, கேபிள் டி.வி போன்ற பகுதிகளுக்கு  அதிகமாக தேவைப்படுவார்கள்.

இதனை கருத்தில் கொண்டு இந்திய அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்/இளம்பெண்களுக்கு,  திருநெல்வேலியில்  6 வார கால அளவுள்ள  "ஆப்டிகல் பைபர் டெக்னிஷீயன்  பயிற்சியை 16.02.2017 முதல் அளிக்கிறது. அனுபவம் வாய்ந்த தொழில் நுட்ப வல்லுநர்களால் நடத்தப்படும் இந்த பயிற்சியின் மூலம் ஆப்டிகல் பைபர் கேபிள் மற்றும் சிஸ்டம் பற்றி தெரிந்துகொள்வதோடு மட்டுமின்றி செய்முறை பயிற்சி மூலம் "ஆப்டிகல் பைபர் ” தொழில்நுட்பம் சார்ந்த திறனையும் வளர்த்து கொள்ளலாம். பயிற்சி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு பயிற்சி நாளைக்கும் ரூ100/- வீதம் பயணப்படியும் வழங்கப்படும்.   

விருப்பமும், தகுதியும்  உள்ள வேலை தேடும் இளைஞர்/இளம்பெண்கள் http://rgmttc.bsnl.co.in/jobportal என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்யக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ஏற்கெனவே பதிவு  செய்தவர்கள் மறுபடியும் பதிவு செய்ய தேவை இல்லை.  நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் சரிபார்ப்பதற்கு ஒரிஜினல் சான்றிதழ்களோடு பதிவு செய்த விண்ணப்பத்தின் இரண்டு  பிரிண்ட் அவுட்கள், ஆதார் அட்டை இரண்டு நகல்கள்  கொண்டு வர வேண்டும். "ஆப்டிகல் பைபர் டெக்னிஷீயன்”  பயிற்சியில் சேர விருப்பம் உள்ள பதிவு செய்யாதவர்களும் சான்றிதழ்களோடு 16.02.2017 அன்று காலை 09.30 மணியளவில்  திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். 

மற்ற பயிற்சியில் பதிவு செய்து அந்த பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள்  இப்பயிற்சியை பெற விரும்பினால் சான்றிதழ்களோடு 16.02.2017 அன்று காலை 09.30 மணியளவில்  திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.    மேலும் விவரங்களுக்கு 0462-2500976  என்ற எண்ணிலோ அல்லது agmcscebtvl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும். வேலை தேடும் இளைஞர்/இளம்பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


மக்கள் கருத்து

s.kanthasamyMar 19, 2017 - 08:50:30 AM | Posted IP 117.2*****

network training

ஸ்.kanthasamyMar 19, 2017 - 08:48:46 AM | Posted IP 117.2*****

நெட்ஒர்க் மேனேஜ்மென்ட் ட்ரைனிங் ஸ்.kanthasamy

L.VELMURUGANFeb 23, 2017 - 05:08:05 PM | Posted IP 106.7*****

I devoted to this job

L.VELMURUGANFeb 23, 2017 - 01:44:15 PM | Posted IP 49.15*****

Opitical piper work

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory