» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாநில பதவியை ராஜினாமா செய்கிறேன் கருப்பசாமி பாண்டியன் பேட்டி : பன்னீருக்கு பாராட்டு!

புதன் 15, பிப்ரவரி 2017 1:20:12 PM (IST)

ஜெ.வால் துரோகி என நீக்கப்பட்ட டிடிவி தினகரனுக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.முக. மாநில அமைப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக‌ கருப்பசாமி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 1972ம் ஆண்டு உயர்ந்த நோக்கத்திற்காக தன்மானம் காப்பாற்றப்படுவதற்காக எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். மூன்றுமுறை முதல்வராக இருந்தார். அவரது மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றோம். அதுநாட்டு மக்களுக்கு தெரியும். ஆனால் இன்று அதிமுக உச்சநீதி மன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலாவின் குடும்ப  சொத்தாகிவிட்டது. ஜெயலலிதாவால் 2011ல் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நீக்கப்பட்டனர். அடுத்த 6மாதங்களில் சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சேர்ந்தார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா குடும்பத்தினரின் பதவி வெறியால் அதிமுக இரண்டாகிவிடுமோ என்ற சூழ்நிலையை மக்கள் அறிவர். நேற்று சசிகலாவை குற்றவாளி என அறிவித்த பின்னர் பொதுச் செயலாளர் பதவிக்கு அடுத்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை டிடிவி தினகரனுக்கு வழங்கியுள்ளார். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டாக்டர் வெங்கடேசையும் கட்சியில் இணைத்துள்ளார். அவருக்கும் பதவி வழங்கப்படலாம். அவரது வகித்து வரும் பொதுச்செயலாளர் பதவியே சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில் இந்த பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
துணைப் பொதுச்செயலாளர் பதவி என்பது நான், செங்கோட்டையன், காளிமுத்து, சின்னச்சாமி ஆகிய நால்வரும் 1996களில் வகித்து வந்தது. அந்தப் பதவியிலிருந்து என்னை நீக்கிய பிறகு யாருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படவில்லை.

அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்களுக்கு பதவியை கொடுத்து அதிமுகவிற்கு சசிகலா அவமானத்தை தேடிதந்துள்ளார். இதை தன்மானம் உள்ள எந்த அதிமுக தொண்டனாலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. எனவே நான் வகித்துவரும் அமைப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறனே். இனியும் பொறுப்பு வகிப்பது மனசாட்சிக்கு விரோதமானது என நினைக்கிறேன். பதவியை நான் கேட்டுப் பெறவில்லை. அவர்களாக வழங்கியது தான். பதவியில்லாதவர்களுக்கு அமைப்புச் செயலாளர் என்ற பதவியை வழங்கி கேவலம் செய்வதை நான் மனதளவில் ஏற்றுக் கொள்ளவில்லை.
நெல்லை, தூத்துக்குடியில் எம்ஜிஆர் அடையாளம் காட்டிய தொண்டர்கள் என்ன முடிவை எடுக்கவேண்டும் என்று விரும்புகிறார்களோ அதுதான் எனது முடிவாக இருக்கும். அதுவரை சாதாரண தொண்டனாக இருப்பேன். இவ்வாறுஅவர்கூறினார்.

ஓபிஎஸ் சிறந்த முதல்வர்


ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வர் பதவிக்கு சுட்டிக்காட்டப்பட்ட ஓபிஎஸ்சுக்குத்தான் தமிழக முதல்வராகும் முதல் தகுதி இருக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும், அவரது துறைகள் அனைத்தும் ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் கட்சி ஒன்று படவேண்டும். சசிகலாவின் கணவர் நடராஜனே ஓபிஎஸ் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார் எனக் கூறியுள்ளார். அதிமுகவை பொறுத்தவரை மக்கள் அனைவருக்கும் தெரிந்தவராக ஓபிஎஸ் இருக்கிறார் என கருப்பசாமி பாண்டியன் தெரிவித்தார்.

ஆளுநர் முடிவு சரியானது

சசிகலாவை முதல்வர் பதவியேற்க ஆளுநர் உடனே அழைத்திருந்தால் 5நாட்களில் முதல்வர் என்ற தகுதியோடு பரப்பன அக்ரஹாரம் சிறைக்கு சென்றிருப்பார். தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டிருக்கும். எனவே ஆளுநர் எடுத்த முடிவு சரியானது. ஆளுநர் சிறப்பாக செயல்படுகிறார் என அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory