» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தற்கொலை செய்த இன்ஜினீயரிங் கல்லூரி மாணவி : உடலை வாங்க மறுத்து 2வது நாளாக போராட்டம்

புதன் 15, பிப்ரவரி 2017 5:37:27 PM (IST)

திடியூர் இன்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தற்கொலை செய்த மாணவியின் உடலை வாங்க மறுத்து 2வது நாளாக உறவினர்கள் போராடி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மங்களாபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகள் மகாதேவி (18). இவர் பாளை அருகே திடியூரில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் கணினி அறிவியல் 2ம் ஆண்டு படித்து வந்தார். இதே கல்லூரியில் இவருடைய அக்காள் மற்றும் தம்பியும் படித்து வருகின்றனர். மகாதேவி நேற்று முன்தினம் மாலையில் கல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்த முன்னீர் பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மாணவியின் உடலை வாங்க மறுத்து நேற்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் மாணவியின் உறவினர்கள் முன்னீர் பள்ளம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவியை அவதூறாக பேசிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினார்கள்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் சமரசம் ஏற்படாததால் அவர்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகம் வந்து புகார் செய்தனர். இந்த நிலையில் இன்று 2வது நாளாக அதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவி மகாதேவியின் உறவினர்கள் போராடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory