» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஓபிஎஸ் ஓ‍ பழசாகி விட்டார்.. அதிமுகவினர் கோஷம்..!! துாத்துக்குடியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

வியாழன் 16, பிப்ரவரி 2017 1:49:58 PM (IST)ஓபிஎஸ் ஓபழசாகி விட்டார் என துாத்துக்குடியில் நடந்த கொண்டாட்டத்தில் அதிமுகவினர் கோஷமிட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமியை ஆளுனர் ஆட்சியமைக்க அழைத்ததை தாெடர்ந்து துாத்துக்குடியில் அதிமுகவினர் பட்டசு வெடித்து கொண்டாடினர்.பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமியை ஆளுனர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். எனவே 4 மணிக்கு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்கிறார்.

இந்நிலையில் இதை கொண்டாடும் விதமாக துாத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு துாத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால்,துாத்துக்குடி மேற்கு மண்டல தலைவர் முருகன், தெற்கு மண்டல தலைவர் பிஎன் ராமகிருஷ்ணன், முன்னாள் துணை மேயர் சேவியர், முன்னாள் யூனியன் தலைவர்கள் விபிஆர் சுரேஷ்,சண்முகவேல், மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய் வழக்கறிஞர்கள் பிள்ளைவிநாயகம் ஆண்டரூமணி பாரதி. மந்திரமூர்த்தி செல்வின், சுபாஷினி, தர்ஷினி மற்றும் ரமேஷ்கிருஷ்ணன்,சங்கரன் தங்கதுரை வேல்முருகன் உட்பட அதிமுக தாெண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் ஜெயலலிதாவுக்கு பன்னீர் செல்வம் துரோகம் செய்து விட்டார் என்றும் ஆகவே ஜெயலலிதாவின் ஆன்மா துரோகி ஓபிஎஸ் சை மன்னிக்காது, அதிமுக தாெடர்ந்து நுாறாண்டுகாலம் இருக்கும்.ஜெயலலிதாவின் ஆசியாலேயே எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக உள்ளார். ஓபிஎஸ் ஓபழசாகி விட்டார் என கோஷமிட்டனர்.


வாகனம் செல்ல வழி ஏற்படுத்திய விபிஆர் சுரேஷ்


அதிமுகவினரின் கொண்டாட்டத்தால் அவ்வழியே வந்த வாகனங்கள் அனைத்தும் மேற்காெண்டு செல்ல முடியாமல் அப்படியே நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை கவனித்த முன்னாள் யூனியன் தலைவர் விபிஆர் சுரேஷ் உடனே வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தார். எனவே வாகனங்கள் தொடர்ந்து அவ்வழியே சென்றது.மக்கள் கருத்து

MakkalFeb 16, 2017 - 08:34:02 PM | Posted IP 157.5*****

உங்களுக்கு தைரியம் இருந்தால் ஆட்சியை குளிச்சிட்டு ஜைது பாருங்க பார்ப்போம் உங்க திறமையை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Guru Hospital

Anbu CommunicationsTirunelveli Business Directory