» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஊருக்குள் அட்டகாசம் செய்த சிறுத்தை : வனத்துறையினர் கூண்டில் சிக்கியது

வெள்ளி 17, பிப்ரவரி 2017 10:31:14 AM (IST)

நெல்லை அருகே ஊருக்குள் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பெத்தான் பிள்ளை குடியிருப்பில் ஊருக்குள் சிறுத்தை ஒன்று அட்டகாசம் செய்து வந்தது. சில தினங்களுக்கு முன் ஊருக்குள் புகுந்த சிறுத்தை அழகம்மாள் என்பவரது ஆட்டை துாக்கி சென்றது. 

மேலும் ஊருக்குள் அது அட்டகாசம் செய்து வந்த நிலையில் அதை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கையின் பேரில் அவர்கள் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தாலும் மீண்டும் இது போன்று நடக்குமோ என அச்சத்தில் உள்ளனர். ஏனென்றால் 3 மாதங்களில் 4 சிறுத்தை பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory