» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தேசிய கையுந்து பந்து போட்டியில் இரண்டாம் இடம் : தூத்துக்குடி பி.எம்.சி பள்ளி மாணவன் சாதனை

வெள்ளி 17, பிப்ரவரி 2017 10:47:14 AM (IST)தேசிய அளவிலான கையுந்து பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கேலோ இந்தியா கையுந்து பந்து போட்டியில் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் தூத்துக்குடி, மில்லர்புரம், பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் கா. ரூபன் நித்தின் ஆப்ரகாம் தமிழ்நாடு மாநில அணி சார்பாக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று பள்ளிக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். 

வெற்றி பெற்ற மாணவருக்கு வெள்ளிப்பதக்கமும் சான்றிதழும் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவரையும், கைப்பந்து பயிற்சியாளர் காட்வின் ஆப்ரகாம் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி), மற்றும் உடற்கல்வி ஆசிரியை ஜீலியட் பிரேம்குமாரி ஆகியோரையும் பள்ளி நிர்வாகி இ. ஜோசப் ஜான் கென்னடி, முதல்வர் பால்கனி, துணை முதல்வர்ஜேன் மேத்யூ மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.


மக்கள் கருத்து

கணேஷ்Feb 17, 2017 - 05:21:14 PM | Posted IP 122.1*****

வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory