» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எட்டு மாத குழந்தைக்கு டெங்கு காய்ச்சலா? விகே புரத்தில் பரபரப்பு

வெள்ளி 17, பிப்ரவரி 2017 12:25:21 PM (IST)

வி.கே.புரம் அருகே ஆறுமுகம்பட்டியில் 8 மாத குழந்தைக்கு டெங்கு காய்ச்சலா? என அதிகாரிகள் சோதனையிட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
 
திருநெல்வேலி மாவட்டம் விகேபுரம் அருகே சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆறுமுகம்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் மகள் உமாமகேஸ்வரி. இவருக்கு திருமணமாகி சுபாஸ்ரீ என்ற 8 மாத பெண் குழந்தை  உள்ளது. அக்குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுபாஷ்ரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதில் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் என தெரியவந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தன் தாய் வீடான ஆறுமுகம்பட்டிக்கு வந்துள்ளார். தொடர்ந்து நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை சுபாஷ்ரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் குணமடைந்த குழந்தையை நேற்று மதியம் உமாமகேஸ்வரி ஆறுமுகம்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அவர்  தனது தாய் வீட்டு முகவரியை கொடுத்துள்ளார். இதையடுத்து மாலை அவரது வீட்டிற்கு அம்பை பிடிஓ சுப்பிரமணியன்,  ஒன்றிய பொறியாளர் ஆழ்வார், மண்டல வட்டார வளர்ச்சி துணை அலுவலர் ஜஸ்டின் ரோஸ்மேரி, சிவந்திபுரம் ஊராட்சி எழுத்தர் வேலு, மோஸ்திரி மெல்பின் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட சுகாதார பணிகளை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory