» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்லூரி மாணவர் தற்கொலை : களக்காடு அருகே சோகம்

வெள்ளி 17, பிப்ரவரி 2017 6:10:50 PM (IST)

களக்காடு அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழபத்தையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரேம் ராஜேஷ் கண்ணன் (25). களக்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎட் படித்து வந்தார்.இந்நிலையில் இன்று காலை அவர், வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். 

உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரேம் ராஜேஷ் கண்ணன் இறந்தார். அவர், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் தெரியவில்லை. இது தொடர்பாக களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Guru Hospital

Anbu Communications



Tirunelveli Business Directory