» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக் மோதி விபத்து, பெண் சாவு : சங்கரன்கோவில் அருகே பரிதாபம்

வெள்ளி 17, பிப்ரவரி 2017 6:17:59 PM (IST)

சங்கரன்கோவில் அருகே பைக் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சங்கரன்கோவில் சங்கர் நகர் 1வது தெருவைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் மனைவி சரஸ்வதி (53). இவர் நேற்று சங்கரன்கோவில் நெல்லை ரோட்டில் உள்ள சின்னக் கோவிலான்குளம் சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு சங்கரன் கோவிலுக்கு செல்ல  நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மேலநீலீதநல்லூரைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் பிரபாகரன் (24) என்பவர் ஓட்டி வந்த பைக் சரஸ்வதி மீது மோதியது. 

இதில் படுகாயமடைந்த அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.இது குறித்து சின்னக் கோவிலான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory