» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்லூரி மாணவியின் உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர் : பேச்சுவார்த்தையில் உடன்பாடு

வெள்ளி 17, பிப்ரவரி 2017 6:22:41 PM (IST)

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள மங்களாபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் மகாதேவி (19). நெல்லை அருகே தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த இவர், கடந்த 13ம்தேதி கல்லூரி விடுதியில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி மகாதேவியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் எஸ்பி அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் வண்ணை முருகன், இளைஞரணி செயலாளர் மாரிராஜ் பாண்டியன் மற்றும் பெண்ணின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory