» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்ட ஆட்சிய‌ருக்கு 71 பேர் பாராட்டு

வெள்ளி 17, பிப்ரவரி 2017 6:46:59 PM (IST)நெல்லை மாவட் டத் தில் வருவாய் துறையில் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற 71 பேர் ஆட்சிய‌ர் கருணாகரனை சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் வருவாய்துறையில் பணியில் இருக்கும் போது மரணமடைந்தவர்களின் வாரிசுகள் 71 பேருக்கு ஆட்சிய‌ராக கருணாகரன் பொறுப்பேற்ற பின்னர் பணி நியமனம் வழங்கி இருந்தார். அதற்காக 71 பேரும் உரிய காலத்தில் பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்ததற்காக நெல்லை ஆட்சிய‌ர் அலுவலகத்தில் ஆட்சிய‌ரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

உதவி ஆட்சிய‌ர் சாரு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, ஆட்சிய‌ர் அலுவலக மேலாளர் தேவர் பிரான் ஆகியோர் உடனிருந் தனர். பின்னர் சத்துணவு திட்டத்தில் 6 பேருக்கு சமையல் உதவியாளர் பணிநியமன ஆணையை ஆட்சிய‌ர் வழங்கினார். நேர்முக உதவியார் (சத்துணவு) பேச்சியம்மாள் உடனிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory