» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடும்ப அட்டையுடன் ஆதார், கைப்பேசி எண்ணை சேர்க்க சிறப்பு முகாம்

வெள்ளி 17, பிப்ரவரி 2017 8:14:08 PM (IST)

குடும்ப அட்டையுடன் ஆதார் கைப்பேசி எண்ணை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் 5 நாட்கள் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதார் எண், கைபேசி போன்ற விவரங்களை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய ஆதார் எண் மற்றும் கைபேசி எண்; விபரங்களை பதிவு செய்வதற்கு ஏதுவாக வரும் 20 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. 

எனவே, ஆதார் கைபேசி எண் பதிவு செய்யாதவர்கள் குடும்ப அட்டை விபரத்துடன் தங்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று வரும் நியாய விலைக் கடைக்குச் சென்று ஆதார் எண் கைபேசி எண்களை, பதிவு செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory