» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாளை சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் : நாடார் அமைப்புகள் அதிரடி அறிவிப்பு

வெள்ளி 17, பிப்ரவரி 2017 8:34:18 PM (IST)

நாடார் சமுதாயத்திற்கு அமைச்சரவையில் இடம் அளிக்காத ஆட்சியாளர்களை கண்டித்து சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக நாடார் அமைப்புகள் அறிவித்துள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து கிட்டத்திட்ட 80 நாள்களுக்குள் 2 முதல்வர்கள் மாறிவிட்டனர். மேலும் தமிழகத்தில் அரசியல் சூழலும் பரபரப்பாக இருக்கிறது .இந்நிலையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. இந்த அமைச்சரவையில் நாடார் சமுதாயத்திற்கு இடம் அளிக்கவில்லை.

தற்போது அதிமுகவில் 4 எம்எல்ஏ.,க்கள் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதில் ஓபிஎஸ் அணியில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ., சண்முகநாதன்,ஆவடி எம்எல்ஏ., மா.பா. பாண்டியராஜன் ஆகியோரும், எடப்பாடி அணியில் ராதாபுரம் எம்எல்ஏ., இன்பதுரை,தென்காசி தொகுதி எம்எல்ஏ.,செல்வமோகன் தாஸ் பாண்டியன் என மொத்தம் 4 பேர் உள்ளனர். 

புதிய அமைச்சரவையில் எடப்பாடி அணியிலுள்ள இரு எம்எல்ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை. இதனை கண்டித்து நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலை முன்பு இருந்து ஊர்வலமாக சென்று சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக நாடார் அமைப்புகள் அறிவித்துள்ளது. 

போராட்டத்திற்கு ஏ.பி.ராஜா தலைமை வகிக்கிறார். கொளத்தூர் த.ரவி, விஜயா சந்திரன் ,மின்னல் ஸ்டிபன், பாலமுருகன், முரளி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

ஜெ ஜெFeb 21, 2017 - 10:58:52 AM | Posted IP 89.21*****

அரசே வாடகை அரசு. இதுல வேற!

வெட்டும்பெருமாள் பாண்டியன்Feb 18, 2017 - 06:41:58 PM | Posted IP 106.2*****

சங்க தலைவி சசிகலா புஷ்பா வை முதல்வராக கொண்டுவரவேண்டும் .

மக்கள்Feb 18, 2017 - 05:49:04 PM | Posted IP 122.1*****

நாடாண்ட சமுதாயத்தின் நிலமைப்பாரீர் வேண்டாமையா இந்த களவாணிபயலுக சகவாசம்

ஜெ ஜெFeb 18, 2017 - 02:58:25 PM | Posted IP 89.21*****

ஏ! சும்மா இருங்கப்பா. கிடைச்சாப்புல என்னத்த கிழிக்க போறானுக.

yovanFeb 17, 2017 - 08:40:54 PM | Posted IP 117.2*****

இந்த புலப்புக்கு தேவையா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory