» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எஸ்பிக்கு வாட்ஸ்அப்பில் கொலைமிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது

வெள்ளி 23, ஜூன் 2017 1:08:43 PM (IST)

நெல்லை மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமாருக்கு வாட்ஸ்ஆப் மூலம் கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா.ராக்கெட் ராஜாவை நெல்லை போலீஸார் சுற்றிவளைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக வீடியோ பதிவையும்  ராக்கெட் ராஜா அண்மையில் வெளியிட்டிருந்தார்.அதில், என்மீது வழக்குகள் எதுவும் இல்லாத நிலையில், என்னைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கில் போலீஸார் செயல்படுகின்றனர். ஒருவரை தூதுவராக விட்டுக்கூட என்னை சரணடையக் கூறினார்கள். ஆனால், நான் சரணடைந்தாலும் என்னைக் கொல்வது உறுதி என தூதுவந்தவர் கூறிவிட்டுச் சென்றார்.

இது முழுக்க முழுக்க நெல்லை எஸ்.பி அருண் சக்திவேல்குமாரின்  தவறான புரிதலால் நடைபெற்றுவருகிறது. இது, என்னுடைய கடைசி வாக்கு மூலமாகக்கூட இருக்கலாம். என்னை முறையாகக் கையாண்டால், நான் சரணடைகிறேன். என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு நெல்லை போலீஸாரே காரணம் என ராக்கெட் ராஜா அந்த வீடியோவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்த விவகாரம் நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த வீடியோ ராக்கெட்ராஜா ஆதரவாளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே ராக்கெட் ராஜா மீது வழக்குபதிவு செய்ததற்காக நெல்லை மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமாருக்கு வாட்ஸ்ஆப் மூலம் நெல்லை மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள ஆணைகுளம் கிராமத்தை சேர்ந்த கண்ணன், மற்றும் சிவகுருநாதபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது வாட்ஸ்அப்பில் வேகமாக பரவியது.இந்த விவகராம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் இருவரையும் பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.இன்று சுரண்டை அருகேயுள்ள ஆணைகுளம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory