» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலஅருவிகளில் குளிக்கத்தடை : கும்பாவுருட்டி அருவிக்கு சுற்றுலாப்பயணிகள் படைஎடுப்பு

புதன் 28, ஜூன் 2017 10:37:52 AM (IST)குற்றால அருவிகளில் குளிக்கத் தடை எதிரொலியால் கும்பாவுருட்டி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள். படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

குற்றாலத்தில் சீசன் தொடங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் கடந்த 3 நாட்களாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. எனவே சுற்றுலாப்பயணிகள் குற்றாலத்திற்கு அருகில் கேரள மாநிலத்தின் வனப்பகுதியில் உள்ள கும்பாவுருட்டி அருவிக்கு படையெடுத்துச் செல்கின்றனர்.

குற்றாலம் மலைப்பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால் அனைத்து அருவிகளிலும வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் மிக அதிகஅளவில் வந்து குவிந்தனர். இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் ஆகிய அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. 

ஆனாலும் சுற்றுலாப்பயணிகள் சாரல் மழையில் நனைவதையும், குளிர்ச்சியான, இதமான சூழலை அனுபவிப்பதிலும் ஆர்வம் காட்டினார்கள். மேலும் குற்றாலம் மெயின்அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் வரும் வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்க்கவும் அனைத்து அருவிக்கரைகளிலும் குவிந்தனர். இதனால் குற்றாலத்தில் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

எனவே குற்றாலத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் கூட்டநெரிசலை சமாளிக்கவும் அருவிகளில் குளிக்க முடியாத ஏமாற்றத்தை போக்கவும் குற்றாலத்திலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் கேரள வனப்பகுதியில் உள்ள கும்பாவுருட்டி அருவிக்கு தங்கள் வாகனங்களில் படையெடுத்துச் சென்றனர்.

குற்றாலத்திலிருந்து - செங்கோட்டை – மேக்கரை – அச்சன்கோவில் வழியாக செல்லும் மலைப்பாதையில் உள்ளது. கும்பாவுருட்டிஅருவி. இந்த அருவி கேரள அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவிக்கு ஆண்டுதோறும் கேரளா மட்டுமன்றி தமிழகத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் வருகை தருவார்கள். 

குற்றாலத்தை போலவே கும்பாவுருட்டி அருவியும் இயற்கை எழிலும், வானுயர்ந்த மரங்களும், மலைப்பாதை வாகனப்பயணமும், அமைந் துள்ளதால் குற்றாலம் சீசனுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் பெரும் பகுதியினர் இந்த கும்பாவுருட்டி அருவிக்கும் சென்று குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.இந்நிலையில் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் குற்றாலத்தில் இருந்து கும்பாவுருட்டி அருவிக்கு சென்று ஆனந்தமாய் குளித்து சீசனை அனுபவித்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory