» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அணுஉலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமாரன் மீது தேசதுரோக வழக்கு : இந்துமக்கள் கட்சி புகார் மனு

செவ்வாய் 11, ஜூலை 2017 11:43:08 AM (IST)கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமாரன் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டுமென இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் உடையார் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துாரிக்கு அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது,கூடன்குளம் அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமாரன் மீது 400க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ரீபப்ளிக் டிவி என்ற தொலைக்காட்சியில் அவர் பேசும் போது, வெளிநாடுகளில் பணம் பெற்றுக்கொண்டு நம்நாட்டிற்கு துரோகம் செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அப்படிப்பட்ட சுப உதயகுமாரன் மீது ஆதாரம் இருக்கும் போது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.அணு உலை பாதுகாக்கப்பட வேண்டும் அதற்கு இராணுவ பாதுகாப்பு அளிக்க வேண்டுமென மக்கள் கருதுகின்றனர்.எனவே இவ்விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து சுப.உதயகுமாரன் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


மக்கள் கருத்து

மக்கள்Jul 11, 2017 - 05:32:02 PM | Posted IP 59.99*****

ரிபப்ளிக் சேனல் ல சூப்பி உதயகுமார் வகையா மாட்டிகிட்டேன் பிராடு பண்ணதை ஒத்துக்கிட்டேன் சீக்கிரம் உள்ள போயிடுவான்

RajaJul 11, 2017 - 02:26:58 PM | Posted IP 117.2*****

very sad

தமிழன்Jul 11, 2017 - 01:35:55 PM | Posted IP 103.3*****

மக்களே நல்லதுக்காக போராடுகிறவர்களுக்கு ஆதரவு கொடுங்க ..சென்னை கடல கப்பல்ல இருந்து ஆயில் கொட்டிட்டு..என்ன பண்ணாங்க தெரியுமா ..அணு உலைல ஆபத்து வந்தா உங்களுக்கு தெரியும்

பாலாJul 11, 2017 - 12:14:01 PM | Posted IP 61.14*****

அடேங்கப்பா.. ஒரு ஊரே திரண்டு நிக்குதே....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory