» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அண்ணாச்சி யூஸ் தி டாய்லெட் : நெல்லைநிர்வாகம் அசத்தல் திட்டம்
புதன் 12, ஜூலை 2017 8:25:14 PM (IST)
திருநெல்வேலியை திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற மாவட்டமாக மாற்ற திருநெல்வேலி சுகாதார லீக் திட்டம் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான விதிமுறைகள் (பங்கேற்பாளர்கள்) இந்த போட்டியில் அனைத்து கிராம ஊராட்சிகளும் பங்கேற்கலாம்.இப்போட்டியில் கிராம ஊராட்சிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும்.பிரிவு அ–300 மற்றும் அதற்கு குறைவான எண்ணிக்கை தனி நபர் இல்ல கழிப்பறையை கட்டி முடித்து அதனை சரியான முறையில் பயன்படுத்தி 100 சதவீதம் திறந்த வெளி மலம் கழித்தல் அற்ற கிராம ஊராட்சிகள்.
பிரிவு ஆ –300க்கு மேலான எண்ணிக்கை தனி நபர் இல்ல கழிப்பறையை கட்டி முடித்து அதனை சரியான முறையில் பயன்படுத்தி 100 சதவீதம் திறந்த வெளி மலம் கழித்தல் அற்ற கிராம ஊராட்சிகள்.ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் 31.10.2017குள் தனி நபர் கழிப்பறையை கட்டிமுடித்தல் .பொது கழிப்பறைகளை சரியான முறையில் பராமரித்தல்.அனைத்து கிராம மக்களும் கழிப்பறை பயன்படுத்துதலை உறுதி செய்தல் மற்றும் கண்காணித்தல். கண்காணிப்பு காலம் 1.11.2017முதல் 31.12.2017 வரை. 10.11.2017அன்று கிராம சபை கூட்டம் நடத்தி 100சதவீதம் திறந்த வெளி மலம் கழித்தல் அற்ற கிராமமாக தங்கள் கிராம ஊராட்சியை அறிவித்தல்.
பொது மக்கள் தங்கள் வீட்டு குப்பைகளை சரியான முறையில் மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரித்து தருதல்.50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை முற்றிலுமாக தவிர்த்தல். பொது மக்கள், பள்ளி மாணவ மாணவிகள், மகளிர் குழு பெண்கள் என அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் இந்த போட்டியில் உறுதி செய்யப்பட வேண்டும்கிராமத்தின் சுகாதாரம் மற்றும் மருத்துவ அளவீடுகளும் கணக்கிடப்படும். குறிப்பாக டெங்கு சம்பந்தப்பட்ட அளவீடுகள்.விதிமுறைகள் (நிர்வாகம்)
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் –கிராம ஊராட்சிகளில் மக்கள் தரம் பிரித்து தரும் குப்பைகளை தூய்மை காவலர்களை கொண்டு மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் என பிரித்து, மக்கும் குப்பைகளை மண் புழு வளர்ப்புக்காகவும், மக்கா குப்பைகளை மறுசுழற்சிக்காகவும் பயன்படுத்துவதை கண்காணித்தல். கிராம ஊராட்சிகளின் திட கழிவு மேலாண்மை திட்டத்தை வலுப்படுத்துதல்.
கிராம ஊராட்சிகளின் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தை வலுப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்.கிராம ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடுவதை உற்சாகப்படுத்துதல்.100 சதவீதம் பிளாஸ்டிக் இல்லா கிராம ஊராட்சிகளை உருவாக்குதல்.தூய்மை கிராமாக அறிவித்த பின்னர் நவம்பர் மற்றும் டிசம்பரில் அரசு அதிகாரிகளின் ஆய்வு செய்து நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதற்கான பரிசுகள்
அ பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் கிராம ஊராட்சிகளுக்கு –26 ஜனவரி 2018அன்று அந்தந்த கிராம சாபவில் முடிவெடுக்கப்படும்,ரூபாய் 10 லட்சம்மதிப்புள்ளகிராம வளர்ச்சி திட்டங்கள் செய்து தரப்படும்.ஆ பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் கிராம ஊராட்சிகளுக்கு – 26 ஜனவரி 2018அன்று அந்தந்த கிராம சாபவில் முடிவெடுக்கப்படும், ரூபாய் 20 லட்சம்மதிப்புள்ளகிராம வளர்ச்சி திட்டங்கள் செய்து தரப்படும்.இது மட்டுமின்றி அதிக எண்ணிக்கை தனி நபர் இல்ல கழிப்பறையை கட்டி கொடுக்கும் கொத்தனார்களுக்கும் அதிக அளவில் மக்களை கழிப்பறை பயன்படுத்த ஊக்கப்படுத்திய சுய உதவி குழு உறுப்பினர்கள்/ பள்ளி மாணவ மாணவிகள்/ பள்ளி ஆசிரியர்கள்/செவிலியர்கள் /டாக்டர்களுக்கும் சிறப்பு பரிசுகள் கொடுக்கப்படும்.
இந்த போட்டிக்காக கிராம ஊராட்சிகளை தத்தெடுக்கும் கம்பெனிகள், நிறுவனங்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அனைத்து கிராம ஊராட்சிகளும் அதற்கான நுழைவு படிவத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். நுழைவுப்படிவம் சமர்ப்பிக்க கடைசி நாள் 31 ஜுலை 2017
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளை.,அருகே கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு
திங்கள் 23, ஏப்ரல் 2018 6:44:22 PM (IST)

பாரில் திருடி விட்டு மதுவும் அருந்திய திருடர்கள் : வண்ணார்பேட்டையில் சம்பவம்
திங்கள் 23, ஏப்ரல் 2018 6:00:07 PM (IST)

திருநெல்வேலியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திங்கள் 23, ஏப்ரல் 2018 5:27:37 PM (IST)

அகில இந்திய தொழிற் பழகுநர் தேர்வு : தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
திங்கள் 23, ஏப்ரல் 2018 2:18:56 PM (IST)

தச்சை வேதிக் பள்ளியில் ஆண்டு நிறைவு பரிசளிப்பு
திங்கள் 23, ஏப்ரல் 2018 1:46:32 PM (IST)

கள்ளக்காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை முயற்சி
திங்கள் 23, ஏப்ரல் 2018 1:23:46 PM (IST)
