» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஸ்பிக் நிறுவனம் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம்

ஞாயிறு 16, ஜூலை 2017 12:22:24 PM (IST)துாத்துக்குடி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ஸ்பிக் சார்பில் இலவச கண் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு ஸ்பிக் முழுநேர இயக்குனர் ராமகிருஷ்ணன் கலந்து காெண்டு துவக்கி வைத்தார்.ஏழ்மை நிலையில் இருந்த பயனாளிகளுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. மேலும் கண்புரை உள்ளவர்கள் மேல் அறுவை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரவிந்த் கண்மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் ஸ்பிக் ஆலை உயர்தலைவர் பாலு, ஸ்பிக்நகர் லயன்ஸ்கிளப் தலைவர் பரணிதரன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் பரத்அருண் மற்றும் லியோ கிளப் ஜீவிதா, அமர்தகெளரி, அரிமா சிவா ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த முகாமில் அரிமா ராஜேஷ்குமார், பிரேம்சுந்தர்,  சரவணன், சிவலிங்கம், கலந்து கொண்டனர். இதில் அருகிலுள்ள முள்ளக்காடு, முத்தையாபுரம், பொட்டல்காடு, சுனாமி காலனி, சவேரியார்புரம் பகுதி மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


மக்கள் கருத்து

Navaladi KarthikeyanJul 16, 2017 - 04:23:35 PM | Posted IP 210.1*****

சீரிய பணி..நேரிய முயற்சி.. மக்கள் சேவை..மகத்தான நோக்கம் .. வளர்க! வாழ்க!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory