» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வேலை கேட்டு நடையாய் நடக்கும் கட்டபொம்மன் வாரிசு

திங்கள் 17, ஜூலை 2017 11:47:13 AM (IST)

தனது மகன் மற்றும் மகளுக்கு வேலை கேட்டு வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு துாத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவரும், பாஞ்சாலங் குறிச்சியின் மன்னராக இருந்தவர் வீர பாண்டிய கட்டபொம்மன்.இவரது பரம்பரையில் நேரடி வாரிசு வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துரை. இவர் இன்று துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர்க்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது,தமிழக அரசு எனக்கு தியாகிகள் பென்சன் ரூ.5500 வழங்கி வருகிறது.அதைதவிர எனக்கு வேறு எந்த சொத்தும் கிடையாது.

வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் வேலை காலியாக இருப்பதால் அதை எனது மகன் கணபதிராஜாவுக்கும் மகள் முருகதேவிக்கும் பணி வயது வரம்பு பார்க்காமல் தொல்லியல் துறையில் இருவருக்கும் பணி வழங்கிட கேட்டு கொள்கிறேன். வேலைக்காக அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் பரிந்துரை கடிதம் வாங்கி அனுப்பியுள்ளேன்.மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை கடிதமும் தேவை என அங்கிருந்து தெரிவிக்கபட்டுள்ளது.எனவே தாங்கள் பரிந்துரை கடிதம் தந்து எனது குடும்பத்தின் வறுமையை போக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

தமிழன்Jul 18, 2017 - 12:01:56 PM | Posted IP 182.7*****

கண்டிப்பா வேலை கொடுக்கணும்

சாமிJul 17, 2017 - 04:58:42 PM | Posted IP 117.2*****

உடனே செய்யவேண்டிய கடமையில் ஆட்சியர் இருக்கிறார்

தமிழ்ச்செல்வன்Jul 17, 2017 - 01:41:18 PM | Posted IP 59.96*****

என்னடா இது ராஜாவுக்கு வந்த சோதனை!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory