» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

துாத்துக்குடியில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் : ஆட்சியருக்கு கோரிக்கை

திங்கள் 17, ஜூலை 2017 1:33:04 PM (IST)
துாத்துக்குடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பரிந்துரை செய்ய வேண்டுமென துாத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் காேரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

துாத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் துாத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது,மத்தியஅரசு அறிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் துாத்துக்குடியில் அமைவது தான் எல்லா வகையிலும் பொருத்தமாக இருக்கும்.

ஏனெனில் இங்கு தான் தொழிலாளர்களும் விவசாயிகளும், வறுமைக்கோட்டுக்கு கீழ்உள்ள மக்களும் அதிகமாக உள்ளனர்.இந்த மாவட்டத்தில் தான் மீன்பிடி தொழிலாளர்கள் உப்பள தொழிலாளர்கள் துறைமுக தொழிலாளர்கள்,அனல்மின் தொழிலாளர்கள் என அதிகம் பேர் உள்ளனர்.

இவர்களுக்கு சிறப்பு சிகிச்சை பெற பல்நோக்கு சிகிச்சை சிறப்பு மருத்துவமனை இங்கு எதுவுமே கிடையாது.மதுரை சென்னை போன்ற நகரங்களுக்கு தான் செல்ல வேண்டியுள்ளது.மேலும் துாத்துக்குடியில் மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள் அதிகமாக இயங்குவதால் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.குறிப்பாக புற்றுநோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள் துாத்துக்குடியில் தான் அதிகம் என பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.

எனவே எய்ம்ஸ் மருத்துவமனையை துாத்துக்குடியில் அமைத்தால் துாத்துக்குடி மட்டுமின்றி தென்மாவட்ட மக்களும் பயனடைவார்கள்.மாவட்ட ஆட்சியர் இது குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு அளிக்கும் போது காங்கிரஸ்நிர்வாகிகள் டேவிட் பிரபாகரன் ஏடி அலெக்சாண்டர்,பாரகன் அந்தோணிமுத்து,கோபால்,ஆனந்தகுமார்,தமிழ்ச்செல்வன் உட்பட பலர் உடன் சென்றனர்.


மக்கள் கருத்து

NanbanJul 17, 2017 - 02:38:54 PM | Posted IP 105.9*****

ஞாயமான கோரிக்கை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory