» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அம்பாசமுத்திரம் நகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு : அதிகாரிகள் அலட்சியம் .

திங்கள் 17, ஜூலை 2017 2:22:13 PM (IST)

அம்பாசமுத்திரம் நகராட்சி பகுதியில் 2 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் தாமிரபரணி ஆற்றில் இருந்து உறிஞ்சி எடுத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட இரும்பு குழாய்களை இன்னும் மாற்றாமல் நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதன் விளைவு இரும்பு குழாய்கள் எங்காவது துருபிடித்து உடைந்து விடுகிறது. இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு விடுகிறது. இது அடிக்கடி நிகழும் சம்பவமாகி விட்டது.

இதே போல் நகராட்சிக்குட்பட்ட ஒரு சில இடங்களில் உள்ள குழாய்களில் உடைபெடுத்து உள்ளது. இதன் பாதிப்பு கடந்த 2 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் பல பகுதிகளில் நிறுத்தப்பட்டு விட்டது. குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டதால் மக்கள் ஆழ்குழாய் நீரை தேடி சென்று பிடித்து பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் குடிநீர் விநியோகம் நிறுத்தம் பற்றிய முறையான அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் வெளியிடவில்லை. எனவே மக்கள் தண்ணீரை தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் குதிக்க தயாராகி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory