» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பருவமழை பொய்த்ததன் எதிரொலி : குளம் போல் வற்றிய கடனாநதி அணை

திங்கள் 17, ஜூலை 2017 2:29:56 PM (IST)பருவமழை பொய்த்து விட்டதன் எதிரொலியாக கடனாநதி அணை வற்றி குளம் போல் காட்சியளிக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பையில் இருந்து கடையம் செல்லும் வழியில் உள்ளது கடனா நதி அணை. இந்த அணையில் தேங்கும் தண்ணீரை கொண்டு கடையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் 1 லட்சம் ஏக்கரில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். ஏற்கனவே வரலாறு காணாத கோடையின் வறட்சியால் கடனா நதி அணை பாசன பகுதிகளில் 2 பருவ சாகுபடி செய்யப்படவில்லை. ஏற்கனவே பாசனத்திற்காக தண்ணீர் கிடைக்காத சூழலில் இப்போது தென் மேற்கு பருவமழையும் பொய்த்து விட்டது.

இதன்விளைவு கடல்போல் காட்சியளித்த கடனாநதி அணை இப்போது குளம்போல் வற்றி காட்சியளிக்கிறது. பாசனத்திற்கு மட்டுமல்ல. சுற்றுலாத்தலமாகவும் கடனா நதி அணை விளங்கி வருகிறது. அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து குளம்போல் சுருங்கி வி;டதால் சுற்றுலா பயணிகளின் வரத்தும் குறைந்து விட்டது. 2 சாகுபடி செய்ய முடியாமல் போய் விட்டதே என்ற கவலையில் ஆழ்ந்திருக்கும் விவசாயிகள். இனி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory